Uncategorized

என்ன அழகு.. எத்தனை அழகு !பாக். வீரர் மனைவியை நேரலையில் வர்ணித்த முன்னாள் வீரர்!

 

இஸ்லாமாபாத் : பி எஸ் எல் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலியின் மனைவியை நேரலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வர்ணித்து பாராட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கிரிக்கெட் வர்ணனையில் மிகவும் முக்கியமான நபர் நியூசிலாந்தின் முன்னாள் பந்துவீச்சாளர் சைமன் தூல். தனது மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய நபர்.

பல்வேறு கிரிக்கெட் வீரர்களை நேரடியாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கிருக்கிறார். சொல்ல வேண்டிய கருத்தை நெட்டிப்போட்டில் அடிப்பது போல் சொல்லும் பழக்கத்தை உடையவர் தான் சைமன் தூல்.

பாபர் மீதான விமர்சனம்

அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் குயிட்டா அணிக்கு எதிராக சதம் அடித்தார். அப்போது பாபர் அசாம் சதம் அடிப்பதற்காக டி20 கிரிக்கெட்டில் சில பந்துகளை வீணடித்தார்.இதன் மூலம் பெஸ்வார் அணி தோல்வியை தழுவியது.இது குறித்து நேரலையிலே பாபர் அசாம் கடுமையாக விமர்சித்த சைமன் தூல், சதம் அடிப்பதற்காக விளையாட வேண்டாம். அணிக்காக விளையாடுங்கள் என்று விமர்சித்தா

அழகான பெண்

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டியின் போது போட்டியை காண வரும் அழகான பெண்களை தொலைக்காட்சியில் கேமராமன்கள் காட்டுவது வழக்கம். இப்படி காட்டப்பட்ட நிறைய பெண்களுக்கு சமூக வலைத்தளத்தில் பேன்ஸ் கிள்ப்பை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். ஐபிஎல் போட்டியின் போது கூட ஆர்சிபி ரசிகை ஒருவர் கேமராவில் வந்து புகழ்பெற்றார். இந்த நிலையில் நேற்று இஸ்லாமாபாத் மற்றும் முல்தான் அணிக்கள் மோதிய ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மயங்கிய சைமன் தூல்

இதில் இஸ்லாமாபாத் வெற்றி பெற்றது போது வீரர்கள் வெற்றியை கொண்டாடிய போது பாகிஸ்தான் வீரர் ஹசன் அலியில் மனைவி சமிராவை கேமரா மேன் நேரலையில் காட்டினார். அப்போது அது யார் என்று தெரியாமல் அந்தப் பெண்ணின் அழகை பார்த்து மயங்கிய சைமன் தூல், தாம் நேரலையில் இருக்கிறோம் என்பதையும் மறந்து பாராட்டி விட்டார் .

பாராட்டு

அந்தப் பெண் வென்று விட்டார். அந்தப் பெண் இன்று பல இதயங்களை கவர்ந்து விட்டார். இது பிரமிக்கும் வகையில் இருக்கிறது. அவ்வளவு அழகு என கௌதம் வாசுதேவன் படத்தில் வரும் ஹீரோ போல் கிரிக்கெட் வர்ணனை செய்தார். சைமன் தூல் இந்த பேச்சை சக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கிண்டல் செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading