Local

எரிவாயு சிலிண்டருக்காக காத்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தனது வீட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்வதற்காக எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்துள்ளார்.

இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பியிடம் வினவியபோது, தனது வீட்டு எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்வதற்காக நுவரெலியா சமையல் எரிவாயு முகவர் நிலையத்திற்கு சென்றதாகவும், அங்கு வரிசையில் காத்திருந்து எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading