World

ஐ.நாவில் இஸ்ரேல் பிரதமருக்கு ஏற்பட்ட அவமானம்

ஐ.நா.வில் இஸ்ரேல் நடவடிக்கைகளை வலுவாக பாதுகாத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச தொடங்கிய போது பல பிரதிநிகள் வெளியேறினர். நெதன்யாகு மேடைக்கு வந்தபோது, ​​அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து பொது சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், அவர்களை “தார்மீகக் கோழைகள்” என்று வர்ணித்தார். பார்வையாளர் மாடத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள் எபிரேய மொழியில், “இஸ்ரேல் மக்கள் வாழ்க” என்று முழக்கமிட்டனர்.

உண்மையை உங்களால் அமைதியாக்க முடியாது

“நான் இங்கு வருவதை நீங்கள் தடுக்க முயன்றீர்கள். என்னை அமைதியாக்க முயன்றீர்கள். சரி, உங்களால் என்னை அமைதியாக்க முடியாது. உண்மையை உங்களால் அமைதியாக்க முடியாது,” என்று மம்தானியை பற்றி நெதன்யாகு கூறினார்.

ஐ.நாவில் இஸ்ரேல் பிரதமருக்கு ஏற்பட்ட அவமானம் | Dozens Of Delegates Walk Out As Netanyahu Takes Un

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்திற்கு நெதன்யாகு வருகை தந்தால், அவர் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக அவரை கைது செய்ய வைப்பேன் என்ற வாக்குறுதியுடன் மம்தானி தேர்தலின்போது பிரசாரம் செய்தார். ஆனால், அவ்வாறு செய்வதற்கு தனக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று பின்னர் அவர் கூறினார்.

இந்த வாரம், மம்தானி, நெதன்யாகுவை “பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஒரு கொடூரமான இனப்படுகொலையின் சூத்திரதாரி” என்று வர்ணித்தார். ஜனவரியில் மம்தானி பதவியேற்ற பிறகு நியூயோர்க்கிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்ட நெதன்யாகு, “இதோ ஒரு எளிய உண்மை: இஸ்ரேல் இனப்படுகொலையை செய்யவில்லை. இஸ்ரேல் இனப்படுகொலையைத் தடுத்தது,” என்று கூறினார்.

ஐ.நாவில் இஸ்ரேல் பிரதமருக்கு ஏற்பட்ட அவமானம் | Dozens Of Delegates Walk Out As Netanyahu Takes Un

“என் நாட்டைப் பற்றியும் நமது வீரமிக்க படைவீரர்களைப் பற்றியும் இந்தப் பொய்களைப் பரப்புபவர்கள், அவர்கள் இந்த அரங்கில் அமர்ந்திருந்தாலும் சரி, நியூயோர்க்கின் யூத-விரோத மேயரின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாலும் சரி, அனைவருக்கும் நான் இதைச் சொல்கிறேன்: உங்களுக்கு வெட்கமாக இல்லையா!” என்று நெதன்யாகு கேள்வியெழுப்பினார்.

“பிரதமர் நெதன்யாகு, தான் மீண்டும் மீண்டும் செய்து வருவதை போலவே, பாலஸ்தீனியர்கள் மீதான தனது இனப்படுகொலையை மூடிமறைக்கும் நோக்கில் ஆதாரமற்ற பொய்களை தனது உரையில் மீண்டும் மீண்டும் கூறினார்.

ஆயினும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் சுமத்தப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணைக்கு அவர் இன்னும் உட்பட்டிருக்கிறார் என்ற உண்மையை எந்த பொய்யாலும் மாற்றிவிட முடியாது,” என மம்தானி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading