Local

ஒரு நிமிடத்தில் 18 முட்டைகளை வாயினால் பிடித்து கின்னஸ் சாதனை!

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் டேவிட் ரஷ் (David Rush) என்ற இளைஞரொருவர் 1 நிமிடத்தில் 18 முட்டைகளை வாயினால் உடையாமல் பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அவருடைய நண்பரான Jonathan Hannon என்பவர் ஆறரை அடி தூரத்திலிருந்து முட்டைகளை எறிய டேவிட் ரஷ் தனது வாயினால் பிடித்தபடி இருந்தார்.

இவ்வாறு 36 முட்டைகள் வீசப்பட்டதில் 24 முட்டைகளை பிடித்தார். அதில் 18 முட்டைகள் உடைபடாமல் இருந்தன.

இதற்கு முன்பு ஒரு நிமிடத்தில் 17 முட்டைகளை வாயினால் உடைபடாமல் பிடித்ததே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading