Local

ஒரே நாளில் அதிகூடிய கொரோனா மரணங்கள் இன்று பதிவானது!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 111 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

56 ஆண்கள் மற்றும் 55 பெண்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading