World

ஒலிம்பிக் போட்டிகளை அனுமதித்த ஜப்பான் பிரதமர் பதவி துறப்பு!

ஜப்பான் பிரதமர்,யோஷிடாசுகா இம்மாத இறுதியில் பதவி விலகவுள்ளார். இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று வெள்ளிக்கிழமை ஆழுங்கட்சிக் கூட்டத்தில் அவர், அறிவித்தார்.

ஆளுங்கட்சியான ஜனநாயக விடுதலைக் கட்சிக் கூட்டம் இன்று (03) நடைபெற்றபோது,பிரதமரைப் பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்ட தாலே,இந்த முடிவை யோஷிடோசுகா அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் ஷின்ஷோஅபே, சுகயீனம் காரணமாக கடந்த 2020 செப்டம்பரில்,பதவி விலகியதைத் தொடர்ந்து,யோஷிடோசுகா பிரதமராகத் தெரிவானார்.

ஜப்பானில் கொரோனாவின் கொடூரம் கோரத்தாண்டவமாடும் இன்றைய சூழலிலும், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதியளித்ததை யடுத்து,இவருக்கான எதிர்ப்புக்கள் அதிகரித்து, இறுதியில் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading