Cinema

வைகைப்புயல் வடிவேலுவின் சம்பளம் அதிகரிப்பு!

பல தடைகளை உடைத்து நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ள நிலையில் அவரின் சம்பளம் தொடர்பான தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருந்தது.

எனவே, கடந்த 4 வருடங்களாகவே வடிவேலு திரைப்படங்களில் நடிக்கவில்லை. பலரின் முயற்சிக்கு பின்னர் தற்போதுதான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த பிரச்சனையை கையில் எடுத்த லைக்கா நிறுவனம், வடிவேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர் மீதான புகாரை ஷங்கர் வாபஸ் பெற்றார்.

லைக்கா நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக 2 திரைப்படங்கள் வடிவேலு நடித்துக்கொடுக்க வேண்டும் எனவும், அதில், ரூ.4 கோடி தனது சம்பளத்தில் கொடுத்துவிடுவதாக வடிவேலு ஒப்புக்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, வடிவேலுவுக்கான தடை நீங்கிய மீண்டும் அவர் களம் இறங்கவுள்ளார். அடுத்து லைக்கா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இந்த 2 படத்திற்கும் சேர்த்து வடிவேலுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading