Local

ஓமானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி!

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவதும் இறுதியுமான டி 20 போட்டியில் இலங்கை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஓமான் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஓமான் அணி சார்பில் Aaqib Ilyas அதிகபட்சமாக 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சாமிக கருணாரத்ன மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன 35 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ஷ 35 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading