Local

முதலமைச்சர் பதவிக்கு பாராளுமன்ற பதவியை துறக்கும் உறுப்பினர்கள்?

2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மூவர் இராஜினாமா செய்வார்கள் என தெரியவருகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கட்சி தலைமைகளுக்கு முன்கூட்டியே அவர்கள் அறிவித்துவிட்டனர் எனவும், மாகாண முதலமைச்சர் பதவியை இலக்குவைத்தே அவர்கள் களமிறங்கவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

பதுளை, பொலனறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரே இவ்வாறு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரும் சவாலை ஏற்றி மாகாண முதலமைச்சர் பதவிக்காகப் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading