World

கடலுக்கு நடுவில் அதிசய விமான நிலையம்..!!

கடலுக்கு நடுவுல ஒரு முழு விமான நிலையமா? ஜப்பான் அதையும் சாதிச்சு காட்டிருச்சு!

ஜப்பான்ல இருக்குற Kansai International Airport சாதாரண இடத்துல இல்லை. ஓசாகா வளைகுடாவில், கடலை தூர்த்து உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் மேல தான் இந்த ஏர்போர்ட் கட்டப்பட்டிருக்கு.

எதுக்காக கடலுக்கு நடுவுல? ஓசாகா போன்ற பெரு நகரங்கள்ல இடப்பற்றாக்குறை அதிகம், அதோடு விமானங்களோட சத்தம் மக்களை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு தான் இந்த ஐடியா.

சில சுவாரஸ்யமான தகவல்கள்:
1980-களில் இதன் கட்டுமான வேலை ஆரம்பிச்சு, 1994-ல் முதல் டெர்மினல் திறக்கப்பட்டது. பலரும் 4 கி.மீ நீள தீவுன்னு சொல்றாங்க, ஆனா உண்மையில் 4,000 மீட்டர் என்பது அங்குள்ள முக்கிய ஓடுபாதையின் (Runway) நீளம் தான்.

கடலில் மண்ணை கொட்டி, மென்மையான தரையில் கட்டியதால் இந்த தீவு மெதுவாக உள்வாங்கும் தன்மை கொண்டது. 2025 நிலவரப்படி வருடத்துக்கு சராசரியா சுமார் 5 செ.மீ வரை settlement ஆவதாக சொல்லப்படுகிறது.

இந்த ஏர்போர்ட்டையும் பிரதான நிலப்பரப்பையும் இணைக்க ரொம்ப நீளமான பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் பொறியியல் திறமைக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading