Local

கட்டார் மற்றும் சவூதிக்கு செல்லவுள்ளவர்கள் பைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியம்!

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்கள் தமது

நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதற்கு பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே இலங்கைப் பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வருமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்பு பணியகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் முதற்கட்டமாக சுமார் 8 ஆயிரம் பேருக்கே பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், சுகாதார துறைக்காக 153.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6 பில்லியன் ரூபாவினால் அது குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading