Local

சிறையில் போத்தலில் சிறுநீர் கழிக்கும் ரிசாத் பதியுதீன்?

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன், மாலை 5 மணிக்குப் பின்னர், போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ரிஷாட் பதியூதீன் எம்.பி, மாலை 5 மணிக்குப் பின்னர் மலசலக்கூடத்துக்குச் செல்லமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அதனால், அவர் ​போத்தலிலே சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்க வழிவகைகளைச் செய்யுமாறு சபாநாயகரிடம் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிநின்றார்.

இதனிடையே குறுக்கிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கடந்தகாலங்களில் தாங்களும் சிறையில் அடைக்கப்பட்டோம். அப்​​போதும் மாலை 5 மணிக்குப் பின்னர், போத்தல்களிலே சிறுநீர் கழித்தோம் என்றார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியூதீன் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி ரிஷாதின் மைதுனரை கைது செய்து சிறையில் பல வாரங்கள் அடைத்து வைத்தார்கள்.

ஆனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading