Local

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் சிக்கிய பெண்!

தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

மருதானை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

குறித்த பெண் வணிக நோக்கத்திற்காக தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading