World

மூன்றாம் உலகப்போர் குறித்து கணிப்பு!

மூன்றாம் உலகப்போர் துவங்கினால், அது என்று துவங்கும், யாரால் துவக்கப்படும் என்பது குறித்த சில்லிடவைக்கும் தகவல்களைக் கொடுத்துள்ளார் பிரித்தானிய நிபுணர் ஒருவர்.

போர் எப்போது துவங்கும்? யார் துவக்குவார்?

பக்கிங்காம் பல்கலைப் பேராசிரியரான Anthony Glees (75), புடின் மூன்றாம் உலகப்போரைத் துவக்கும் நாள் என ஒரு நாளை கணித்துள்ளார். அதாவது, ரஷ்யாவில் பொதுத்தேர்தல் இந்த ஆண்டு, மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. ரஷ்யாவைப் பொருத்தவரை, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே புடின் வெற்றி பெற்றுவிட்டதாகவே கூறமுடியும்.

ஆக, 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்துள்ளார் பேராசிரியர் ஆண்டனி.

மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள்... பிரித்தானிய நிபுணரின் சில்லிடவைக்கும் துல்லியமான கணிப்பு | World War Iii Begins Prediction Of British Expert

ஆனால், போரைத் துவக்கப்போவது புடின் இல்லை என்கிறார் அவர். புடினின் கைப்பொம்மையாக இருக்கும் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர்தான் (Aleksandr Lukashenko) போரைத் துவக்குவார் என்கிறார் அவர். அதாவது, அலெக்சாண்டர் தன் பக்கத்து நாடுகளாகிய போலந்து அல்லது உக்ரைன் தன் நாட்டுக்குள் ஊடுருவியதாக குற்றம் சாட்டி, அதற்கு பதிலடி கொடுப்பதாகக் கூறி சண்டையைத் துவக்க, அப்படித்தான் போர் துவங்கும் என்கிறார் பேராசிரியர் ஆண்டனி.

போரை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும்?

போர் எப்போது துவங்கும், யார் துவக்குவார் என்று கூறியதுடன் நிறுத்தவில்லை பேராசிரியர் ஆண்டனி. போரை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார் அவர்.

அவரது கூற்றுப்படி, முதலாவதாக, ரஷ்யாவில் தேர்தல் துவங்குவதற்கு முன் உக்ரைன் புடினுக்கு சரியான அடி கொடுக்கவேண்டும்.

மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள்... பிரித்தானிய நிபுணரின் சில்லிடவைக்கும் துல்லியமான கணிப்பு | World War Iii Begins Prediction Of British Expert

இரண்டாவதாக, போர் ஏற்படும் நிலை வருமானால், போரிடுவதற்கான தேவை உள்ளதை மக்களுக்கு புரியவைக்கவேண்டும்.

கடைசியாக, இப்போது நாம் செய்துவருவதையே தொடர்ந்து செய்யவேண்டும். அதாவது, நம் நாடுகளின் பாதுகாப்புக்காகவும், நேட்டோ போர்ப்பயிற்சிக்காகவும் கூடுதல் நிதி செலவிடவேண்டும்.

நேட்டோ எல்லைக்குள் ரஷ்ய போர் வீரரகள் யாராவது கால் வைத்தால், அடுத்த சில நிமிடங்களுக்குள் புடினை நாம் அழித்துவிடுவோம் என்பதைக் காட்டுவதற்காக நாம் இந்த போர்ப்பயிற்சிகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறும் பேராசிரியர் ஆண்டனி, புடினை ஒருபோதும் சாந்தப்படுத்தமாட்டோம், நம்மை அழிக்க புடின் முயற்சி செய்தால், நாம் அவரை அழிக்கத்தான் முடியும் என்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading