World

கணவனை உயிருடன் புதைத்த மனைவி!

கணவன் கூறியதால் உயிருடன் மனைவி அவரை புதைத்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(60). இவருடைய மனைவி லட்சும்(45) இவர்களுக்கு ஒரு மகள் மற்று மகனும் உள்ளனர். மகன் துபாயில் வேலை செய்கிறார். 25 மகள் தமிழரசி சோழிங்கநல்லூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், குறி சொல்லி சாமி ஆடும் நாகராஜ் கடந்த நாள் 17-ம் திகதியன்று நாகராஜுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அதற்கு உடனே மனைவியிடம் நான் இறந்துவிடுவேன் என்றும், தன்னை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துவிடுமாறும், ஜூவ சமாதி அடைந்துவிடுவேன் எனவும், யாரிடமும் சொல்லவேண்டாம் என சத்தியம் வாங்கிக்கொண்டார் என போலீசாரிடம் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார் மனைவி லட்சுமி.

இதனைத்தொடர்ந்து, வீட்டில் தந்தையை கணவில்லை என அறிந்த மகள் தமிழரசி, தாயிடம் கேட்டப்போது, நடந்த விஷயத்தை பற்றி தயங்கி கூறி இருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த மகள், உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

பின்னர் விசாரித்தபோது கணவர் தான் ஜுவசமாதி அடைய இப்படி செய்ய சொல்லி சத்தியம் வாங்கி கொண்டார் என தெரிவித்து இருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நாகராஜ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய இருக்கிறார்கள்.

மேலும், பிரேத பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்னரே மேற்கொண்டு உண்மைகள் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading