LocalSports

மேற்கத்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வலுவான நிலையில்!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன தனது 13வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழக்காமல் 132 ஒட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறார்.

தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும், பதம் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும், ஷானன் கேப்ரியல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading