Local

கனடாத் தூதுவருடன் நாமல் டுவிட்டரில் கருத்து மோதல்!

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையே டுவிட்டரில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

“ஜே.வி.பி., ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை மேற்கொள்வது சுவாரஷ்யமாக உள்ளது. இந்தக் கட்சிகள் தங்கள் மக்கள் மற்றும் சமூகத்தவர்களைச் சந்திப்பது குறித்து அதிக அக்கறை செலுத்தினால், தேர்தலுக்கான மக்களின் எதிர்பார்ப்பைச் செவிமடுத்தால் இலங்கை நன்மையடையும்” என நாமல் ராஜபக்‌ஷ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கருத்துக்குப் பதிலளித்த இலங்கைக்கான கனடாத் தூதுவர், “நீங்கள் உங்கள் பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகர்கள் சிலர் யாரைச் சந்திக்கின்றனர் என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த நாமல் ராஜபக்‌ஷ, “இலங்கை ஒரு இறையாண்மை நாடாகவும் மக்களின் சிறந்த உறைவிடமாகவும் காணப்படுகின்றது. அந்த இறையாண்மையை பேணுவது அனைத்து தலைவர்களின் கடமையாகும். இதில் தேர்தலும் அடங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading