கனடாவில் பிறந்த நாள் தினத்தில் உயிரிழந்த யாழ் இளைஞர்!

கனடா மார்க்கமில் கடந்த வாரம் இடம்பெற்ற வித்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பில் உறவினர்கள் பதில்களை எதிர்பார்க்கிறார்கள்.
இந்த விபத்தில் 21 வயதான படீரன் புவனேந்திரன் மற்றம் 23 வயதான நிலுக்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் மாமாவான சுவென் பூபாலசிங்கம் இவ்வாறு கூறியுள்ளார்.
இது எதையும் மாற்றப்போவதில்லை. ஆனால், வேறு எந்த குழந்தைகளுக்கும் இவ்வாறு நடக்காமல் இருக்க, எங்களுக்கு ஏதாவது ஒரு நீதி வேண்டும்.
தனது பிறந்தநாளில் உயிரிழந்த வில்பிரிட் லாரியர் பல்கலைக்கழக மாணவர் படீரன் புவனேந்திரன் மற்றும் ஜார்ஜ் பிரவுன் கல்லூரி மாணவி நிலுக்சனா புவனேந்திரன்ஆகியோரின் இறுதிச் சடங்குகளை பூபாலசிங்கம் ஏற்பாடு செய்து வருகிறார்.
டாஷ்போர்டு கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கின் வடக்கே மார்க்கம் ரோடு மற்றும் எல்சன் வீதியில் டிரக் வண்டி கார் மீது மோதியதை காணொளி காட்டுகிறது.
பிற்பகல் 2:05 மணியளவில் அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். 46 வயதான டிரக்கின் சாரதி காயமின்றி சம்பவ இடத்திலேயே இருந்ததாக யோர்க் பிராந்திய காவல்துறை கூறுகிறது.
சனிக்கிழமை வரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
விபத்தை நேரில் பார்த்த யாரேனும், அவர்கள் ஏற்கனவே காவல்துறையிடம் பேசவில்லை என்றால், அவர்கள் முன் வருமாறு புலனாய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
காரில் படீரன் மற்றும் நிலுக்சனா ஆகியோருடன் இருந்த அவர்களின் தாயாரான 52 வயதான ஸ்ரீரதி சண்முகநாதனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
அவர் கண் விழித்ததும் தனது பிள்ளைகள் எங்கே என என்னிட்டம் கேட்பார் என பூபாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
“இதுதான் நடந்தது என்று அவரிடம் சொல்ல வேண்டும், மேலும் அவளால் இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியுமா என்று பார்க்க விரும்புகிறேன். அவள் எழுந்திருப்பதற்காக நான் காத்திருக்கிறேன்.
இறுதியில், யார் சரி, யார் தவறு என்பது முக்கியமல்ல. என்ன மிச்சம் என்பதுதான் முக்கியம். என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாயைப் பொறுத்தவரை குணமடைந்து வருவதாகவும், அவருடைய நிலைமை மேம்பட்டு வருவதாகவும் இறந்தவரின் உறவினரான துர்கா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விபத்திற்கு முன் வாகனங்களை ஓட்டுபவர்கள் அல்லது வாகனம் ஓட்டும் நடத்தை குறித்த தகவல் தெரிந்தவர்களிடம் காவல்துறை பேச விரும்புகிறது.
இந்த கொடிய விபத்து தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், விசாரணைப் பிரிவை 1-866-876-5423, ext என்ற எண்ணில் அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
