LocalNorth

யாழில் ஒரே மேசையில் எதிரெதிர் அரசியல் பிரமுகர்கள்

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் ஒரே மேசையில் அமர்ந்திருந்தனர்.

வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிரெதிர் அரசியல் தரப்பினர் ஒன்றாக இணைந்திருந்ததைப் போல் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும் அவர்கள் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

 

 

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading