World

காதலன் 16 வயது சிறுமியுடன் இருந்த வீடியோவை வெளியிட்டதால் சிறுமி தற்கொலை

16 வயது சிறுமி காதலுனுடன் தனிமையில் இருந்த வீடியோ காட்சி கசிந்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் சரநகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் 16 வயது சிறுமி. இவர் காதலனுடன் தனிமையில் இருந்து அதை வீடியோவாக எடுத்துள்ளனர்.

ஆனால், சிறுமியின் காதலன் அந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இப்படியே அவரது நண்பர்களுக்கு அவர்களது நண்பர்கள் என்று கசிய விட்டுள்ளனர்.

இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே சிறுமியின் பெற்றோர் கடந்த மாதம் காவல்நிலையத்தில், சிறுமியின் காதலன் மீது புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் மனம்வேதனை அடைந்த சிறுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் காதலன் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading