Local

நுவரெலியாவில் தலைவர் பதவி தொண்டாவுக்கு! எஸ் பி அவுட்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசியல் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட தலைவராக இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் மொட்டு சின்னத்தின்கீழ் போட்டியிடுபவர்களின் பெயர் பட்டியலை இறுதிப்படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

இதற்கான நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வதிவிடத்தில் நடைபெற்றது. இதன்போது வேட்பு மனுவில் மாவட்ட தலைவர்கள் கையொப்பமிட்டார்கள்.

குருணாகலை மாவட்ட தலைவராக மஹிந்த ராஜபக்சவும், கண்டி மாவட்ட தலைவராக மஹிந்தானந்த அளுத்கமகேயும், நுவரெலியா மாவட்ட தலைவராக ஆறுமுகன் தொண்டமானும் கையொப்பமிட்டனர்.

எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி. ரத்னாயக்க ஆகியோர் நுவரெலியாவில் களமிறங்குகின்றனர். எனினும், தொண்டமானுக்கு முக்கிய பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தை கைப்பற்றவே பிரதான வேட்பாளராக தான் களமிறங்கியிருப்பதாக எஸ்.பி. அறிவிப்பு விடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading