Gossip

காதலர் தினத்தில் கள்ளக் காதலியுடன் இருந்த கணவர் மனைவியிடம் மாட்டிக் கொண்ட சம்பவம்

நேற்றைய தினத்தில் காதலர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவில் காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் செல்வதை அவதானித்த மனைவி, அவர்களை மடக்கி பிடித்து, நடுரோட்டில் கணவரை திட்டித் தீர்த்துள்ளார்.

பின்பு சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணை நடத்தியதில், திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். குழந்தைகள் பிறக்கும் வரை நன்றாக இருந்த கணவர் தற்போது இவ்வாறு மாறிவிட்டார் என்று மனைவி கண்ணீர் சிந்தியுள்ளார்.

ஆனால் கணவரோ மிகவும் அசால்ட்டாக காதலியை அழைத்துக்கொண்டு காதலர் தினத்தினை கொண்டாடுகின்றேன் என்று தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று சமாதானம் செய்தும் பலனில்லையாம்.

இதனால் மனைவி கொடுக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading