Local

யாழ்ப்பாணத்தில் திருடிய 13 கோடி ரூபா பெறுமதியான தங்கங்களுடன் இருவர் கைது

வட மாகாணத்தில் திருடப்படும் நகைகளை உருக்கி இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவ்வாறு கைது செய்த சந்தேக நபர்களிடமிருந்து தங்க கட்டிகளை மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடக்கு மாகாண பகுதிகளில் திருடபடும் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி இந்தியாவிற்கு கடத்தும் நடவடிக்கையில் ஒரு குழு ஒன்று ஈடுபட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு கடல் மார்க்கமாக தங்க கட்டிகளை இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட போது காங்கேசன்துறை கடற்படையினரால் கைது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 137 மில்லியன் (13 கோடியே 70 இலட்சம் ரூபா) பெறுமதியான 14 கிலோ 300 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
மாதகல் கடற்பரப்பில் பயணித்த டிங்கி படகு ஒன்று சோதனைக்குட்படுத்திய போதுஇ 14 கிலோ 300 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading