Local

காத்தான்குடி நபர் 5 வாள்களுடன் பதுளையில் கைது

பதுளையின் பிரபல ஹோட்டலொன்றினை சோதனையிட்ட பதுளை பொலிஸார் , அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்களை கண்டுபிடித்து மீட்டதுடன், ஹோட்டல் உரிமையாளரையும் இன்று கைது செய்துள்ளனர்.

பதுளை பள்ளிவாசல் வீதியில் (இலக்கம் 9ல்) அமைந்துள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான பிரபல ஹோட்டலிலேயே, குறிப்பிட்ட ஐந்துவாள்கள் மீட்கப்பட்டன.வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்றுவாள்களும், உள்நாட்டு தயாரிப்பிலான இரு வாள்களுமே மீட்கப்பட்டனவாகும்.

கைது செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் காத்தான் குடியை பிறப்பிடமாகக் கொண்டும், பதுளையை வசிப்பிடமாகக் கொண்டு ஹோட்டல் ஒன்றை நடாத்திவரும் இந்நபர், அகில இலங்கை சமாதான நீதிவானாகவும், பதுளை சிவில் பாதுகாப்பு முக்கிய உறுப்பினராகவும் இருந்து வந்தவரேகைது செய்யப்பட்டவராவார்.

மேற்படி சம்பவம் குறித்து, பதுளைப் பொலிசார் தீவிரபுலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பதுளை நிருபர் எம். செல்வராஜா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading