Local

குண்டை வெடிக்க வைக்க முடியாமல் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தடுமாறிய தற்கொலைதாரி!

இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்த காணொளிகள் ஊடகங்களினால் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்க முடியாமல் தடுமாறிய ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைதாரியின் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்ற 36 வயதான குண்டுதாரி, தற்கொலைக் குண்டுடன் ஹோட்டலில் சுற்றித் திரிந்துள்ளார். எனினும், அவரது வெடிகுண்டு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குள் செயலிழந்துள்ளது.

அதிகளவான வெளிநாட்டவர்கள் தமது காலை உணவைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் வெடிகுண்டை வெடிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது பல முறை லதீப் அதனை வெடிக்க வைக்க முயற்சித்துள்ளார். எனினும், அவரால் முடியவில்லை.

இதனால் கோபமாகச் சென்று அங்குள்ள நாற்காலியில் அமர்கின்றார். அங்கும் முயற்சி செய்து பார்க்கின்றார். எனினும், அவரால் அதனை இயக்க முடியவில்லை.

பின்னர் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகிலுள்ள சிறிய விடுதிக்குச் சென்று தனது குண்டை பரிசோதித்துப் பார்க்கின்றார். இதன்போது அது திடீரென வெடித்துள்ளார். அதிலேயே அவர் உடல் சிதறிப் பலியாகின்றார். அந்த விடுதியில் தங்கி நின்ற தம்பதியினரும் இதன்போது உயிரிழந்துள்ளனர்.

இலக்கு வைத்த திட்டங்களுக்கமைய லதீப் மாத்திரமே தோல்வியடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

லதீப் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றவராவார். பின்னர் இலண்டனில் தனது பட்டப்படிப்பை முடித்தவர் என சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading