World

காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் தெற்காசியா!

ஐக்கிய நாடுகள் சபையின் IPPC(சர்வதேச காலநிலை இடை அரசுக் குழு) அமைப்பால் காலநிலை மாற்ற மதிப்பீட்டு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டு அறிக்கை அந்த அமைப்பால் வெளியிடப்படும் ஆறாவது அறிக்கை ஆகும்.அந்த அறிக்கையில் புவி வெப்பநிலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 1.5 டிகிரி செல்ஸியஸ் வரை வருங்காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் இந்த 

அதீத வெப்பநிலை உயர்வால் ஏற்படும் பனிப்பாறைகளின் உருகல் இதனால்  கடல்மட்டம் உயர்வு,அதிதீவிர புயல்கள் அது ஏற்படுத்தும் வெள்ள  பாதிப்புகள் மற்றும் பருவம் தவறிய பருவமழைகள் குறித்து விளக்கி கூறுகிறது.

இன்று வெளியாகியுள்ள  IPCC யின் “காலநிலை மாற்றம் 2021” அறிக்கை,புவியில்  ஏற்பட்டுள்ள பலவித மாற்றங்கள் மாற்றமுடியாததெனவும் ,பசுமை இல்ல வாயு வெளியீட்டை குறைத்தாலும் மீட்ருவாக்கம் செய்யமுடியாதது என்றும்  அச்சமூட்டவும் செய்கிறது.ஆனால், பசுமை இல்ல வாயு வெளியீட்டை குறைப்பதை  நீண்டகால நோக்காக கொண்டால் அதிகரிக்கும் 1.5 டிகிரி செல்சியசை குறைக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது. 

காலநிலை மாற்றத்தால் தெற்காசியா அதிக பாதிப்புறும் எனவும் மற்ற எல்லா கடல்பரப்புகளை விடவும் இமயமலை பனிப்பாறைகளால் இந்தியப்பெருங்கடலின் கடல்மட்டம் அதிகமாக உயரும் என்றும் எச்சரிக்கும் IPCC இந்த நூற்றாண்டில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள கையறுநிலையை கண்முன்னே உணர்த்துகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading