Cinema

பிரபுதேவா வைத்திருந்த தாடிக்கு காரணம் நயன்தாரா?

பிரதேவா வைத்திருந்த தாடிக்கு நயன்தாரா தான் காரணம் என்று கூறிவந்த ரசிகர்களுக்கு, பல வருடங்களுக்கு பின்பு தற்போது உண்மை தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபுதேவா. இவரது நடனத்தினை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் வெற்றி படம் கொடுத்து தற்போது முன்னனி இயக்குனராகவும் பெயர் எடுத்துள்ளார்.

சமீபத்தில் கூட ஹிந்தியில் சல்மான்கான் வைத்து ராதே எனும் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

பிரபுதேவா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவருடைய பலூன் பேகி பேண்ட். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பதால் இந்த பேண்டின் மீது ஆர்வம் வந்ததாகவும் அதன் மட்டுமில்லாமல் நடனமாடும் போது இது சவுகரியமாக இருந்ததாகவும் அதனால் தான் இந்த பேண்ட்டை பயன்படுத்தியதாக கூறியுள்ளார். ஒருமுறை ரஜினி சார் கூட இந்த பேண்ட் கேட்டதாக வெளிப்படையாக ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் நீங்கள் பல வருடமாக தாடி வைத்திருக்கிறீர்கள் அதற்கு என்ன காரணம் என கேட்டனர். அதற்கு நான் சிறு வயதிலேயே நடன இயக்குனராக அறிமுகமாகி விட்டேன்.

அதனால் தன்னை வயதானவராக காட்டிக் கொள்வதற்கு தாடி வைத்திருப்பதாகவும், மேலும் இவருடைய தந்தையின் தாடி வைத்திருப்பதைப் பார்த்து தனக்கும் தாடி வைத்திருப்பது பிடித்ததாகவும் கூறியுள்ளார்.

நீண்ட நாட்களாக பிரபுதேவாவின் தாடிக்கு நயன்தாரா காரணமாக இருப்பாரோ என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்திருந்த நிலையில், தற்போது இவரது தாடியின் ரகசியம் தெரிந்த ரசிகர்கள், அப்போ நயன்தாரா காரணம் இல்லையா என்று அதிர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading