World

குறட்டை சத்தத்தால் 8 ஆண்டுகளாக கணவனுடன் படுக்கையை தவிர்க்கும் மனைவி!

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் வசிக்கும் மொடல் அழகி கோல் ஜப்பானோவ்ஸ்கி என்பவர், கடந்த 8 ஆண்டுகளாக தனது கணவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளவில்லை.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், சமீபத்தில் தனது சமூக ஊடக பக்கத்தில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த 8 ஆண்டுகளாக ஒரே படுக்கையில் எனது கணவர் ஓர்வலுடன் படுத்து தூங்கவில்லை. அவர் தூங்கும் போது குறட்டை விடுகிறார்.
அது எனக்கு அசவுகரியமாக உள்ளது.

அவர் தூங்குவது விலங்குகள் தூங்குவது போன்று உள்ளது.இதனால், இரவு நேரத்தில் நானும் எனது குழந்தைகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம். என்னாலும் சரியாக தூங்க முடியவில்லை. எனவே இரவு நேரத்தில் என் குழந்தைகளுடன் நான் தனியாக படுத்துக் கொள்கிறேன். என் கணவரின் அருகில் படுக்க மாட்டேன். பரஸ்பர புரிதலுடன் தான் இவ்வாறு செய்கிறேன். இதனால் எனது கணவருக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை’ என்று கூறியிருந்தார்.

அதற்கு ஒருவர் இன்ஸ்டாகிராமில், ‘கணவரை பிரிந்து படுக்கும் உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘எங்களுக்குள் உறவு சரியாக இல்லை தான்.ஆனால் ஒருவருக்கொருவர் புரிதலுடன் வாழ்ந்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். குறட்டை விடுவதால், தனது கணவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளாத மாடல் அழகியை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading