World

கூகுள் ஊழியர்களுக்கு கொரோனா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

இந்தியாவிலுள்ள  கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து குறித்த  கிளையை தற்காலிகமாக மூடியுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பெங்களுரூ நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர்களை அவரவர் இல்லத்தில் இருந்து பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்று உள்ள ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக அவர்களையே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்று கூகுள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading