Local

தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடுகள் நிறுத்தம்

தொழிலாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடுகள் மீள அறிவிக்கப்படும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், கொரோனா தொற்று பரவியுள்ள சில நாடுகள், தமது நாடுகளுக்கான உட்பிரவேசத்தை மட்டுப்படுத்த எடுத்துள்ள தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading