Cinema

கேரளாவில் சாதனைப் படைத்த ரஜனியின் ஜெய்லர்!

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருபவர் ரஜினிகாந்த். சினிமா துறையில் இவர் அடைந்திருக்கும் உயரத்தை இன்று யாராலும் எட்ட முடியாது என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆகவும்  ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாகவும் வளம் வருபவர் .

இவரது வளர்ச்சியில் கடைசியாக வந்த இரண்டு திரைப்படங்களான அண்ணாத்த மற்றும் தர்பார்  சிறிய சற்களை கொடுத்தது அதனைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய முனைப்பில் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து  ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்  ரஜினிகாந்த். இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது

இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தமன்னா, மலையாள சினிமாவின் பிரபலமான மோகன் லால், கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்  மற்றும் பாலிவுட் பிரபல நடிகரான ஜாக்கி சரஃப்  ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .

படம் வெளியாவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில்  தென் இந்திய சினிமா  படங்களிலேயே கேரளாவில்  அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற  சாதனையைப் படைத்திருக்கிறது ஜெய்லர்  திரைப்படம். மோகன்லால் மற்றும் ரஜினிகாந்தின் இணைந்து நடித்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கு கேரளாவிலும் அதிக அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மலையாளத் திரைப்படங்களை தவிர பிராந்திய மொழி திரைப்படங்களில் அதிக திரையரங்குகளில் கேரளாவில் விழியாக இருக்கும் திரைப்படமாக சூப்பர் ஸ்டாரின் ஜெய்லர் திரைப்படம் இடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தென்னிந்திய சினிமாவில் எவ்வளவு பிரம்மாண்டமான மற்றும் பான் இந்தியா திரைப்படங்கள் வந்தாலும் ரஜினியின் திரைப்படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் கிடைத்திருக்கின்றன

சமீபத்தில் வெளியான அந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது . மேலும் தளபதி திரைப்படத்திற்கு பிறகு கேரளாவின் டாப் ஸ்டார் நடிகருடன் சூப்பர் ஸ்டார் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மோகன்லால் மற்றும் சூப்பர் ஸ்டார் என இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இணைந்து கலக்கி இருப்பதால் இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது .

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading