Local

கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட மாணவி!

காலி – உடுகமை, கல்லந்தல பிரதேசத்தில் வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 16 வயதான பாடசாலை மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைகளுக்காக இன்று கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவி தனது தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையை பயன்படுத்தி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மாணவி தற்கொலை செய்துக்கொள்ளும் முன்னர் எடுத்ததாக கூறப்படும் சேலையை பயன்படுத்தி கழுத்தில் சுருக்கிட்டு கொள்வது போன்ற காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள், மாணவியின் கையடக்க தொலைபேசியில் இருந்ததாக உடுகமை பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த மாணவி கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதில் அடிமையானவராக இருந்துள்ளர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ளும் முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்யும் காணொளிகளையும் பார்த்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து உடுகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading