Local

கொக்க கோலா குளிர்ப்பானத்தில் கொரோனா?

அவுஸ்திரிய நாடாளுமன்றில், கொக்க கோலா குளிர் பானத்தில் கொரோனா இருப்பதாக (பொசிடிவ்) துரித கொரோனா பரிசோதனை முறைமை காட்டுவதை நிரூபித்துள்ளார் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் ஷென்ட்லிட்ஸ்.அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் கொரோனா பரிசோதனை முறைமைகள் சந்தேகத்துக்குரியவை என சுட்டிக்காட்டும் வகையில் நாடாளுமன்றில் அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் நேரடியாக இவ்வாறு ஒரு பரிசோதனையை அவர் செய்து காட்டியுள்ளதன் பின்னணியில் சர்ச்சை எழுந்துள்ளது

விமான நிலையங்கள் மற்றும் பெரும்பாலான நாடுகளில் துரித பரிசோதனை முறைமை தற்போது அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.துரித முறைமை அவ்வளவு சரியானதாக இருக்காது என்ற கருத்து பல இடங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.இதனால் கொவிட் பரவல் துரிதமாகியுள்ளது என்றும் சுட்டிகாட்டினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading