Local

கொரோனாவிலிருந்து மீண்டவர்களை தாக்கும் பூஞ்சை தொற்று நோய்!

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்கும் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதாக டெல்லியிலுள்ள கங்காராம் மருத்துவமனை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதாலும், ஸ்டெராய்டுகள் வழங்கப்படுவது மற்றும் இணை நோய்கள் இருப்பதாலும் முகார்மிகாசிஸ் என்ற பூஞ்சை தொற்று மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இஎன்டி பிரிவு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.முன்கூட்டியே பரிசோதனை செய்து கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலமே பாதிப்பை தவிர்க்க முடியும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.         

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading