Local

கொன்சியூலர் சேவைகளை நாளை முதல் மட்டுப்படுத்த தீர்மானம்

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், 11 நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்களின் கொன்சியூலர் சேவைகளை நாளை (16) முதல் மட்டுப்படுத்துவதற்கு வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கான தூதரங்களின் கொன்சியூலர் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

உலக நாடுகள் விமான பயணங்களுக்கு தடை விதித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading