Lead News

கொரானா வைரஸின் அறிகுறி இருபது நாட்களுக்கு பிறகுதான் தெரியுமாம்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் அறிகுறி, பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகுதான் தெரியும் என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆறாயிரம் உயிர்களை காவுகொண்டுள்ள கொரோனா வைரஸின் பரவலை தடுக்க, உலக நாடுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இன்று (திங்கள் கிழமை) அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ளது.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் தாக்கினால், அந்த வைரஸ் அவரது உடலில் எத்தனை நாட்கள் வரை இருக்கும் என்பதை சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாட்கள் அது வீரியத்துடன் இருக்கும் என்றும் 20 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா அறிகுறிகள் தெரிந்த பிறகு 20 நாட்கள் கவனமாக இருக்கவேண்டும் எனவும் வைரஸால் பாதிக்கப்பட்டவர் அந்த பாதிப்பில் இருந்து மீண்டுவர சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகிய பிறகும் ஓரிரு நாட்களுக்கு அந்த வைரஸின் தாக்கம் உடலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகும் என அமெரிக்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading