Local

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.29 இலட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.29 இலட்சத்தை தாண்டியது.  சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது  209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா,  இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,29,484 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும்  கொரோனாவால் 19,800,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,719,181 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,172 பேர்  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டு 6,352,171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading