Local

கொரோனாவுக்கு எத்தனை பெயர்கள்?

கொரோனாவுக்குத் தான் அது பரவத்துவங்கியதிலிருந்து ஏதோ புயலுக்குப் பெயர் சூட்டிய மாதிரி எத்தனை பெயர்கள்? முதலில் கோவிட் என்றார்கள்.

பிறகு உரு மாறிய கொரோனா என்றார்கள். இப்போது உலக சுகாதார நிறுவனத்தில் யோசித்து அதன் தொழில்நுட்பக்குழுத் தலைவரான மரியாவான் கர்கோவ் நேற்று முக்கியமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் ஒவ்வொரு நாட்டில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவுக்குத் தனித்தனிப் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவுக்கு எப்சிலான், அயோட்டா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

பிரேசல் நாட்டுக் கொரோனாவுக்கு – கமா, ஜீட்டா.
இங்கிலாந்தில் பரவிய கொரோனாவுக்கு – ஆல்பா.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கொரோனாவுக்கு – பீட்டா.

முதலில் பரவிய கொரோனாவுக்கு “காப்பா” என்றும், இரண்டாவது அலைக்கு “டெல்டா” என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

பிறந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகு பெயர் சூட்டுவது மாதிரி நடக்கின்றன இந்தப் பெயர் சூட்டும் சடங்குகள்?

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading