திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!

இனிமேல், திருமணம் செய்வோருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், திருமண பதிவுக்கட்டணம் 620 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருமண பதிவுக்கட்டணம் 4,400 ரூபாயாக இதுவரையிலும் இருந்தது. எனினும், அந்தக் கட்டணம் 5,020 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகை, ஜூன் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
