Local

கொரோனா சடலங்களை அடக்க இடங்கள் தயார்!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக நிலத்தடியிலிருந்து நீர்மட்டம் மிகவும் ஆழமாக இருக்கும் இரண்டு இடங்களை பரிந்துரை செய்து அறிக்கையை ஒப்படைத்துள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதற்கமைய மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசமும் கிழக்கு மாகாணத்தில் இரக்காமம் பிரதேசமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பிரதேசங்களில் தரைமட்டத்திலிருந்து 30 ஆடி ஆழத்தில் கூட நீரை பெற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த, அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், அமைச்சர் வாசுதேவ நானாயக்கார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading