Local

கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு தனியாரிடம் உதவி கோரும் அரசு!

கொரோனா நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்காக தனியார் பிரிவிடமிருந்து வாகனங்களை பெற்றுக் கொள்வதற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அம்பூலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லையென்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான நிதி, மாகாண சபைகளூடாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகனங்களை வழங்குவதற்கு எவரேனும் விருப்பம் கொண்டிருந்தால், தமது சுகாதார அதிகாரிகளுக்கு அது குறித்து அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த நாட்களில் நோயாளர்கள் பதிவாகாத மாவட்டங்களிலும் தற்போது சிறு கொத்தணிகள் உருவாவதாக
விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வுகள் மற்றும் மரண சடங்களுக்கு செல்வதால் பெரும்பாலானோருக்கு தொற்று பரவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading