Local

மேல் மாகாணத்துக்கு வெளியில் கொவிட் அச்சுறுத்தல் மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம்!

மேல் மாகாணத்துக்கு வெளியில் கொவிட் அச்சுறுத்தல் மும்மடங்கு அதிகரித்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், அது தொடர்பில் கவனம் செலுத்தாமை காரணமாக தற்போது நாடு முழுவதும் நோயாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், இந்த மாத இறுதியின்போது மிகவும் அபாயகரமான நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என அந்த சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading