World

கொரோனா நோயாளியை கற்பழித்த மருத்துவர் கைது!



கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல உயிரிழப்புகளாலும் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில்,இந்தியாவின் அரசு மருத்துவமனை மருத்துவர் கொரோனா நோயாளியை கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரில் தீன்தயாள் அரசு மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவமனையில் கொரோனாவுக்கென தனியாக ஒரு வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரை அங்கு பணிபுரியும் மருத்துவர் கர்ப்பளித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு மருத்துவர் மீது 376 2(இ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிசார் மருத்துவரை கைது செய்துள்ளனர். முதல் மந்திரி அலுவலகம் இந்த வழக்கை விசாரிக்க குழு ஒன்றை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading