World

திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தாய்க்கு கொரோனா தாயும் ஐந்து பிள்ளைகளும் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில், திருமணத்துக்குச் சென்று வந்த தாய்க்கு கொரோனா பாதித்ததன் மூலம், அவரும் அவரது 5 மகன்களும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் கட்ரஸ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டில்லியில் நடந்த உறவினர் திருமணத்துக்குச் சென்று வந்த 88 வயதான மூதாட்டிக்கு, வீடு திரும்பிய ஓரிரு நாட்களில் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைய, அவரது இறுதிச் சடங்கு முடிந்த பிறகுதான் அவருக்கு கொரோனா இருக்கிறது என்ற பரிசோதனை முடிவு வெளியானது.

சென்னையில் கொரோனா பாதித்த 14,952 பேருக்கு சிகிச்சை இதனால், எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் இன்றி நடத்தப்பட்ட இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட உறவினர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், தன் தாய் இறந்து 16 நாட்களில் அவரது 6 மகன்களில் 5 மகன்கள் ஒருவர் பின் ஒருவராக கொரோனாவுக்கு பலியாகினர். அனைத்து மகன்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
கடைசியாக 5வது மகன் கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கட்ராஜ் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading