Local

கொரோனா நோயாளி யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓட்டம்

கொரொனா வைரஸ் தொற்று தொடர்பில் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றப்படவிருந்த ஒருவர் தப்பிச்சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கட்டாரில் சீன நாட்டவர் ஒருவருடன் ஒரே அறையில் வசித்து வந்த ஒருவர் கடந்த வாரம் இலங்கை திரும்பியிருந்தார்.

இந்தநிலையில் காய்ச்சல் காரணமாக அவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

அவரை உரிய பரிசோதனைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அனுப்ப ஏற்பாடுகளை செய்தபோதே அவர் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து குறித்தவரின் வீட்;டில் நேற்று மாலை காவல்துறையினர் விசாரித்தபோது செய்தி ஒன்றை வீட்டில் வைத்துவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பயம் காரணமாக அவர் எங்காவது மறைந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்தநிலையில் எந்தவொருவரும் இதுவரை தமது வைத்தியாசலையில் கொரொனாவைரவஸ் தொற்று சந்தேகத்துடன் அனுமதிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading