World

சீனாவில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு இல்லை!!

சீனாவில் கொரோனோ வைரஸ் தொற்றால் உயிரிந்தவர்களின் சடலங்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்லவோ இறுதிச் சடங்குகளைச் செய்யவோ இன்றுமுதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அந்த இடத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் உனடியாக எரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்புக்கள், பாதிப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொற்று மேலும் பரவாமல் இருக்கும் நோக்கில் சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
வைரஸ் தொற்று பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீன அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading