Local

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு சுகாதார அமைப்பு கவலை!

உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கடந்த வாரம் 11% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு அதன் வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையில், டிசம்பர் 20 மற்றும் 26 க்கு இடையில் உலகளவில் கிட்டத்தட்ட 4.99 மில்லியன் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த மொத்த எண்ணிக்கையில் ஐரோப்பாவில் பாதிக்கு மேல் பதிவாகியுள்ளது, அங்கு மட்டும் 2.84 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஐரோப்பாவில் முந்தைய வாரத்தில் பதிவான பாதிப்பை விட 3% அதிகமாகும்.

ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற வகையில் பார்த்தால், ஐரோப்பாவில் ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 304.6 பேர் புதிததாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், உலகளவில் அதிக தொற்று விகதிதத்தைக் கொண்டதாக ஐரோப்பா உள்ளது.

அமெரிக்காவில் புதிய தொற்றுகள் 39% அதிகரித்து கிட்டத்தட்ட 1.48 மில்லியனாக உள்ளது.

மேலும் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 144.4 பேர் புதிததாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது உலகளவில் இரண்டாவது மிக உயர்ந்த தொற்று விகிதம் கொண்டுள்ளது.

புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொடர்ந்து மிக ஆபத்தானதாக இருக்கிறது. உலகின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா மாறுபாட்டை விட இது தீவிரமாக பரவியுள்ளது என்பதற்கான நிலையான சான்றுகளை WHO மேற்கோள் காட்டியுள்ளது.       

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading