Local

கொரோனா வைரஸ் இறுதி தொற்றல்ல இன்னும் நிறைய பெருத்தொற்றுகள் வருமாம்!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் குறித்து ஐ.நா.பொதுச்செயலாளர் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக மக்களை ஆட்டி படைத்து வருகின்றது. கொரோனாவிற்கே தீர்வு கிடைக்காத நிலையில் புதிதாக உருமாறிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது கொரோனாவில் இருந்து உருமாறிய வைரஸ் என்பதால் Omicron என்று உலக சுகாதாரத்துறை பெயர் சூட்டியுள்ளது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்து முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது கொரோனா என்பது உலகம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல.. கொரோனா போன்று இன்னும் நிறைய பெருத்தொற்றுகள் வரும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல கொரோனா கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கும்போதே அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading