Local

ரஞ்சனின் காதலியுடன் சென்ற எஸ்.பி.திசாநாயக்க!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார்.

இதன்படி ,அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர், அந்த சிறையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவரை , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க, சிறைச்சாலைக்குச் சென்று அண்மையில் பார்வையிட்டுள்ளார்.

“தான், ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்குச் சென்றிருந்தேன். சுமார் அரைமணிநேரம் அவருடன் உரையாடியிருந்தேன். நான் தனியாக செல்லவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் சென்றிருந்தேன். காதலி ஒரு வைத்தியர், அவர், தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார். என்னுடன், என்னுடைய ஊடகச் செயலாளரும் வருகைதந்திருந்தார்” என்றும் எஸ்.பி. திசாநாயக்க தனியார் ஊடகமொன்றுக்கு கருத்துரைத்திருந்தார்.

இதற்கமைய “ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென்பது தொடர்பில் கலந்துரையாடவில்லை.

இருப்பினும் , பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அதன்பின்னரே ஜனாதிபதியிடம் வலியுறுத்தமுடியும் எனினும், இதுதொடர்பில் நான், சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்” என்றும் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading