Local

கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொழும்பு நகரின் சிலபகுதிகளில் தனிமைப்படுத்தல் செயற்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில்  ராணுவ தளபதி ஷவேந்தர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி கொழும்பு நகரின்  மட்டக்களிய ரன்திய  உயன  மோதரை மெத்சந்த செவன , முகத்துவாரம் மிஹிஜய செவன, கிராண்ட்பாஸ் மோதர உயன, கிராண்ட்பாஸ் சமகிபுர, தெமட்டகொடை மிஹிந்துசெத்புர ஆகிய தொடர்மாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு நகரில் மேலும் 7 தொடர்மாடி குடியிருப்பு தொகுதிகளில் தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் ஈராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading